sales@vasudhaaqua.com

எங்களைப் பற்றி

Vasudha Aqua

நிலையான வாழ்க்கை என்பது ஒரு தேர்வு மட்டுமல்ல; இது காலத்தின் தேவை ஆகும். வசுதா அக்குவாவில், அன்றாட வாழ்க்கையில் தண்ணீரை சேமிப்பதன் மூலம் நீடித்த நிலையில் வாழ உதவும் தீர்வுகளை வழங்குவதற்கான எங்கள் பேரார்வத்தால் நாங்கள் உந்தப்படுகிறோம்.

வீடுகள், குடியிருப்புகள், வணிக மற்றும் நிறுவன பயன்பாடுகளுக்கான எங்கள் க்ரே வாட்டர் (கழிவுநீர்) மறுசுழற்சி மற்றும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஆகியவை எங்கள் தகுதிவாய்ந்த பொறியாளர்களின் குழுவால் உருவாக்கப்பட்டு நடைமுறைக்கேற்ப பொறியியல் ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. கணிசமான தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் வணிக அனுபவத்துடன், வினைத்திறனுள்ள மற்றும் மலிவான விலையில் நீர் பாதுகாப்பு அமைப்புகளை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

நீங்கள் மறுபயன்பாடு செய்யலாம் எனும்போது ஏன் வீணாக்க வேண்டும்?

நீர் நெருக்கடி’ என்பது வாட்டும் ஒரு பிரச்சினை. மேலும், முடிந்தவரை தண்ணீரை சேமிப்பது நமது பொறுப்பாகும். எனவே, சுத்தமான மற்றும் குடிக்கத் தகுந்த நீரை ஏன் ஒவ்வொரு நாளும் கழிவுநீராக வெளியேற்ற வேண்டும்? அதனை மறுசுழற்சி செய்து தோட்டத்தில் ஊற்றுவதற்கு, நிலத்தடி நீரை மீள்நிரப்பச் (ரீசார்ஜ்) செய்வதற்கு, கழிப்பறைகளை சுத்தப்படுத்துவது அல்லது உங்கள் கார்களையும் பைக்குகளையும் கழுவுவதற்கு ஏன் மீண்டும் பயன்படுத்தக்கூடாது? அதற்குத் தான் வசுதா அக்குவாவில் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.

எளிதாக்கப்பட்ட நீடித்து நிலைக்கும் வாழ்க்கைமுறை

எங்கள் சிறந்த க்ரே வாட்டர் (கழிவுநீர்) மற்றும் மழைநீர் சேகரிப்பு தீர்வுகள் உங்கள் நீர் கட்டண செலவைக் குறைத்து, பசுமையான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்கையில் தண்ணீரை சேமிக்க அனுமதிக்கின்றன. நீங்கள் தினமும் பயன்படுத்தும் 65% முதல் 70% தண்ணீரை நிலத்தடியில் மீள்நிரப்பச் (ரீசார்ஜ்) செய்ய முடிந்தால், நீங்கள் அன்றாடம் பலவிதங்களில் நல்ல தண்ணீர் பயன்பாட்டை குறைத்து, சுற்றுச்சூழலையும் உங்கள் பணத்தையும் சேமிக்கலாம் என்பதை கற்பனை செய்து பாருங்கள். இதில் சிறந்த அம்சம் என்னவென்றால், அதிக மாற்றியமைத்தல்கள் செய்யாமல் ஏற்கனவே இருக்கும் வடிகால் லைன்களில் எங்கள் அமைப்புகளை எளிதாக பொருத்த முடியும். எனவே அவற்றை நிறுவுவது தொந்தரவில்லாத ஒரு செயல்முறையாகும்.

எங்கள் க்ரே வாட்டர் (கழிவுநீர்) சிஸ்டத்தின் (GWS) ஸ்டார் அம்சங்கள்

எங்கள் க்ரே வாட்டர் (கழிவுநீர்) சிஸ்டத்தை (GWS) எந்தவொரு தவறும் ஏற்பட வாய்ப்பில்லாததாக மாற்றுவதற்காக வசுதா அக்குவாவில் உள்ள எங்கள் நிபுணர்களின் குழு R&D நடத்துவதில் கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. எங்கள் GWS இன் முக்கிய அம்சங்கள் உள்ளடக்குவது:

  • புவி ஈர்ப்பு விசை மற்றும் நிகழ்நேரத்தில் நீர் சுத்திகரிப்பு
  • பொருத்திய பின்னர் எந்தவொரு தலையீடும் தேவையில்லாத வடிவமைப்பு
  • எந்தவொரு சேமிப்பு தொட்டியும் பம்ப்பும் தேவையில்லை
  • எந்தவொரு கடுமையான இரசாயனங்களும் தேவையில்லை

நிறுவுவதற்கு முன், நாங்கள் உங்கள் இடத்திற்கு வருகை தந்து சாத்தியக்கூறுகள் மற்றும் சாத்தியமான சிக்கல்களை ஆராய்வோம். பகுப்பாய்வு முடிந்ததும், நாங்கள் உங்களுக்கு ஒரு விலை குறிப்பிடல் வழங்குவோம், நீங்கள் எங்களுக்கு ஏற்பு அளித்தவுடன் திட்டத்தை தொடங்குவோம்

வசுதா அக்குவாவைத் தேர்வுசெய்க. நம்பகத்தன்மையைத் தேர்வுசெய்க

GWS வழங்குவதைத் தவிர, குறைந்த செலவுள்ள மழைநீர் சேகரிப்பு தீர்வுகளையும் நாங்கள் வழங்குகிறோம். இந்த இரண்டு அமைப்புகளும் ஒன்றாக சேர்ந்து நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க உதவுவதோடு வடிகட்டப்பட்ட க்ரே வாட்டரை (கழிவுநீரை) மீண்டும் பயன்படுத்தவும் அனுமதிக்கும்.

தண்ணீரை சேமிக்க நீங்கள் முன்னோக்கி வருகையில், வசுதா அக்குவாவின் மூலம், எங்கள் நிபுணத்துவம், தொழில் சார்ந்த மனப்பான்மை மற்றும் நாங்கள் நிரூபிக்கும் நம்பகத்தன்மை ஆகியவற்றின் நற்பலன்களை நீங்கள் பெறலாம்.

எங்களைப் பற்றி மேலும் அறிய அல்லது வேறு எந்தவொரு கேள்விக்கும், இன்றே எங்களைத் !தொடர்பு கொள்ளுங்கள் !