sales@vasudhaaqua.com

க்ரே வாட்டர் (கழிவுநீர்) சிஸ்டம் (GWS)

உங்கள் அன்றாட பயன்பாட்டிலிருந்து — அதாவது கழுவுதல், சுத்தம் செய்தல் மற்றும் குளித்தல் (கழிப்பறையிலிருந்து வரும் தண்ணீரைத் தவிர) ஆகியவற்றில் இருந்து வெளியேறும் கழிவுநீர் - க்ரே வாட்டர் (கழிவுநீர்) என்று அழைக்கப்படுகிறது.

GWS ஏன் பயன்படுத்த வேண்டும்?

மழை பொழிவு நிலையானது அல்ல, ஆனால் க்ரே வாட்டர் (கழிவுநீர்) நிலையானது. மழை ஒவ்வொரு நாளும் பொழியாது. ஆனால் நீங்கள் ஒவ்வொரு நாளும் குளிப்பீர்கள், சலவை செய்வீர்கள், மற்றும் பாத்திரங்களை கழுவுவீர்கள், இதனால் கணிசமான அளவு க்ரே வாட்டர் (கழிவுநீர்) உருவாகும். நீங்கள் இந்த க்ரேவாட்டரை பலவிதமான வீட்டு வேலைகளுக்குப் பயன்படுத்தலாம், இவ்வாறு உங்கள் நல்ல தண்ணீர் பயன்பாட்டை குறைப்பதுடன், உங்கள் பணத்தையும் சேமிக்கலாம். இங்கு தான் எங்கள் க்ரே வாட்டர் (கழிவுநீர்) அமைப்பு (GWS) உதவிக்கு வருகிறது.

வசுதா அக்குவாவில், க்ரே வாட்டர் (கழிவுநீர்) மறுசுழற்சியை எளிதான, தொந்தரவில்லாத, வேகமான மற்றும் சிக்கனமானதாக ஆக்கும் எந்தவொரு தவறும் ஏற்பட வாய்ப்பில்லாத ஒரு GWS மாடலை நாங்கள் வடிவமைத்துள்ளோம். மின்சாரம் அல்லது எந்தவொரு வேதிப்பொருட்களுக்கும் தேவை இல்லாத நிலையில், இது உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் முற்றிலும் பாதுகாப்பான நடைமுறையில் கவலையின்றி பொருத்தக்கூடிய ஒரு அமைப்பாகும். எங்கள் GWS அமைப்பை நிறுவுவது துரிதமானதாகும் மற்றும் உங்கள் வீட்டுக்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படுத்தும் வகையில் நாங்கள் அதை பொருத்தி சில மணிநேரங்களில் இயக்குவோம்.

கசிவுகள் அல்லது அடைப்புகள் பற்றி எந்த கவலையும் இல்லாமல் - பழுதடையாத எங்கள் GWS அமைப்பு க்ரே வாட்டரை (கழிவுநீரை) கொண்டு செல்ல பம்ப்புகளுக்கு பதிலாக புவி ஈர்ப்பு விசையை பயன்படுத்திக்கொள்கிறது.

எங்கள் GWS அமைப்பின் மூலம் உங்கள் வீட்டில் தண்ணீரை சேமிக்க ஆர்வமா? மேலும் அறிய இன்றே எங்களை அழைக்கவும்!

GWS என்ன நற்பலன்களை வழங்குகிறது?

  • க்ரே வாட்டரை (கழிவுநீரை) பயன்படுத்துவது தண்ணீரை சேமிப்பதில் பெருமளவு உதவுகிறது.
  • இது உங்கள் நீர் கட்டண செலவுகளை குறைப்பதன் மூலம் உங்கள் பணத்தை சேமிக்கிறது.
  • இது தாவர வாழ்வைத் தக்கவைக்க நிலத்தடி நீர் மற்றும் மேல் மண்ணை மீள்நிரப்பச் (ரீசார்ஜ்) செய்கிறது
  • இது சுற்றுச்சூழலுக்கு ஏற்ற விருப்பத்தேர்வாகும்

எங்கள் க்ரே வாட்டர் (கழிவுநீர்) சிஸ்டம்ஸ் (GWS) எவ்வாறு செயல்படுகிறது?

வசுதா அக்குவாவில் உள்ள எங்கள் திறமைவாய்ந்த நிபுணர்களின் குழு எங்கள் GWS மாடலை பழுதடையாததாக ஆக்குவதற்கு R&D இல் நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. இது எவ்வாறு செயல்படுகிறது என்றால் –

    கழிவறை ஃப்ளஷ் நீரைத் தவிர்த்து வாஷிங் மெஷின், சமையலறை சிங்க் மற்றும் குளியலறையிலிருந்து பயன்படுத்தப்பட்ட தண்ணீரை எங்கள் க்ரே வாட்டர் (கழிவுநீர்) சிஸ்டம் சேகரிக்கிறது.

    அதன்பிறகு, நீர் 4-படி சுத்திகரிப்பு செயல்முறைக்கு உட்படுகிறது.

    • படி 1 – இந்த செயல்முறை இடைநீக்கப்பட்ட அசுத்தங்கள் மற்றும் கனமான துகள்களை நீக்குகிறது.
    • படி 2 – இந்த செயல்முறை எண்ணெய் மற்றும் கிரீஸ் ஆகியவற்றைப் பிரிக்கிறது.
    • படி 3 – இந்த கட்டத்தில் 3 முதல் 4 மைக்ரோன் வரையிலான அனைத்து நுண்ணிய துகள்களும் அகற்றப்படுகின்றன.
    • படி 4 – இது பாக்டீரியா மற்றும் நாற்றத்தை அகற்ற கார்பன் உயர் அடர்த்தி வடிகட்டியைப் பயன்படுத்துகிறது.

சுத்திகரிக்கப்பட்ட க்ரே வாட்டர் (கழிவுநீர்) மீள்நிரப்பச் (ரீசார்ஜ்) செய்தல், தோட்டக்கலை அல்லது மறுபயன்பாடு ஆகியவற்றுக்கு ஏற்றதாகிறது மற்றும் பாசன நியமங்களுக்காக நிலத்தை சென்றடைகிறது.

சரி, நகராட்சி இதையெல்லாம் கவனித்துக்கொள்ளும்போது, நீங்கள் ஏன் அக்கறை கொள்ள வேண்டும்? ஏனென்றால், தண்ணீரைச் சேமிப்பது ஒவ்வொரு நபரின் சமூகப் பொறுப்பாகும் - குறிப்பாக இன்று தண்ணீர் பற்றாக்குறை ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் போது எங்கள் GWS அதைச் செய்வதற்கான ஒரு புத்திசாலித்தனமான மற்றும் தொந்தரவில்லாத வழியாகும்.

வசுதா அக்குவாவின் GWS சாதனத்தை பெற விருப்பமா? இப்போதே எங்களை ! தொடர்பு கொள்ளுங்கள் !